Why more time to AAP asks BJP
Why more time to AAP asks BJP ஆட்சியமைக்க மக்களிடம் ஆம் ஆத்மி கட்சி கருத்து கேட்பது நாடகம்: பா.ஜனதா தாக்கு Why more time to AAP asks BJP
புதுடெல்லி, டிச. 20-
டெல்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. முதலில் இதனை ஏற்க மறுத்த ஆம் ஆத்மி கட்சி, பின்னர் இதுதொடர்பாக ஆலோசனை நடத்த கூடுதல் அவகாசம் கேட்டது. அத்துடன், கூட்டணி ஆட்சி குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு வருகிறது. இதன் முடிவை ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு அறிவிக்க உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு மத்திய அரசு கூடுதல் அவகாசம் அளிக்கப்படும் என்று உள்துறை மந்திரி ஷிண்டே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் இந்த கூட்டணி முயற்சியை பா.ஜனதா கட்சியின் டெல்லி மாநில தலைவர் விஜய் கோயல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க மத்திய அரசு கூடுதல் அவகாசம் அளிக்கும் என ஷிண்டே கூறியிருப்பது, இது புனிதமற்ற கூட்டணிக்கான பேச்சுவார்த்தையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
இரண்டு கட்சிகளுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், ஆட்சியமைக்க கூடுதல் அவகாசம் எடுப்பதால் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. மேலும் கூட்டணி ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியவில்லை என்றே தெரிகிறது. காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மக்களை அணுகுவது நாடகம்" என்றார்.
... Why more time to AAP asks BJP
0 comments: