Ganguly rejected modi request do not contest election
Img மோடி கோரிக்கை நிராகரிப்பு: தேர்தலில் போட்டியிட மாட்டேன் கங்குலி அறிவிப்பு ganguly rejected modi request do not contest election
மும்பை, டிச. 15–
கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கருக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு டெல்லி மேல்சபை எம்.பி. பதவி வழங்கியது. அதோடு ஓய்வு பெறும் தினத்தில் பாரத ரத்னா விருது வழங்குவதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்கலியை பாரதீய ஜனதாவில் இழுக்க அக்கட்சி முயற்சி செய்தது.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த 41 வயதான அவருக்கு ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் ஆதரவு இருப்பதால் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அக்கட்சி முடிவு செய்தது.
பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட 'சீட்' தருவதாக கங்குலியிடம் நரேந்திர மோடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும் விளையாட்டு மந்திரி பதவி தருவதாகவும், உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பாரதீய ஜனதா பொதுச்செயலாளரும் மேற்கு வங்காள மேலிட பார்வையாளருமான வருண்காந்தி, கங்குலியை சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார்.
இந்த நிலையில் நரேந்திர மோடியின் கோரிக்கையை கங்குலி நிராகரித்துவிட்டார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது குறித்து கூறியதாவது:–
பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட 'சீட்' தருவதாக என்னிடம் உறுதி அளிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், இதை ஏற்க நான் மறுக்கிறேன். தேர்தலில் போட்டியிடமாட்டேன். எனது இடம் கிரிக்கெட் மைதானம்தான். பாராளுமன்றம் அல்ல.
இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.
...
0 comments: