anna hazare fast not to participate workers Aam Aadmi party ban
Img anna hazare fast not to participate workers Aam Aadmi party ban
ஹசாரேயின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க கூடாது: தொண்டர்களுக்கு 'ஆம் ஆத்மி' கட்சி தடை anna hazare fast not to participate workers Aam Aadmi party ban
புனே, டிச.12-
பாராளுமன்றத்தின் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில், வலுவான லோக்பால் சட்டம் இயற்றக்கோரி பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம், ராலேகான்சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை என தகவல்கள் கூறுகின்றன. அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்தில் தனது கட்சித்தொண்டர்கள் பங்கேற்க வேண்டாம் என 'ஆம் ஆத்மி' கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி அந்தக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரசாரத்தின்போது தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதினார். அதை கவனத்தில் கொண்டுதான் இப்போது அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் பங்கேற்க விதிக்கப்பட்டுள்ளது" என்றனர்.
...
0 comments: