hockey world league final india training camp will begin tomorrow

hockey world league final india training camp will begin tomorrow டெல்லியில் ஹாக்கி உலக லீக் பைனல்: இந்திய அணியின் பயிற்சி முகாம் நாளை துவக்கம் hockey world league final india training camp will begin tomorrow

புதுடெல்லி, டிச. 27-

ஹாக்கி உலக லீக் இறுதிச்சுற்று போட்டிகள் டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு மைதானத்தில் வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் இந்திய அணியின் பயிற்சி முகாம் நாளை தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் இந்தியா ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இப்பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் அர்ஜென்டினா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய அணி 10-ம் தேதி தனது முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதுகிறது. பின்னர் 11-ம் தேதி நியூசிலாந்துடனும், 13-ம் தேதி ஜெர்மனியுடனும் விளையாடுகிறது.

இந்த தொடரில் இந்திய அணி, உலகின் முன்னணி அணிகளை எதிர்த்து விளையாடுவது, அடுத்த ஆண்டு மே மாதம் நெதர்லாந்தில் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான சிறந்த பயிற்சியாக அமையும். 
...


0 comments:

Popular Posts