4 மாநில தேர்தல் தோல்வி சோனியா ராஜினாமா state election defeat Sonia consultation to remove the Congress curators

Img 4 மாநில தேர்தல் தோல்வி: காங்கிரஸ் பொறுப்பாளர்களை நீக்க சோனியா ஆலோசனை 4 state election defeat Sonia consultation to remove the Congress curators

புதுடெல்லி, டிச. 10–

5 மாநில சட்டசபை தேர்தலில் டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. டெல்லியில் தோல்வியை எதிர்பார்த்த காங்கிரஸ் தலைவர்களுக்கு, கட்சி படுதோல்வி அடைந்ததை ஜீரணிக்க முடியவில்லை.

4 மாநிலங்களில் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் சோனியா கவலையும் விரக்தியும் அடைந்தார். நேற்று அவர் அவசரம், அவசரமாக காங்கிரஸ் மூத்த தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தவிர மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, சுசீல் குமார், ஷிண்டே உள்பட பலரும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் பணவீக்கத்தால் ஏற்பட்ட விலைவாசி உயர்வே காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ற கூறினார்கள். அதை சோனியா ஏற்றுக் கொண்டார்.

கூட்டத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்த 4 மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் தோல்விக்கான காரணத்தை அறிக்கையாக தயாரித்து சோனியாவிடம் கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட சோனியா 4 மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களிடம் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

4 மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களை நீக்க சோனியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2014 பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில், புதிய நிர்வாகிகளை சோனியா தேர்வு செய்தார் என்று தெரிகிறது.

...


0 comments:

Popular Posts