தொழிலாளர்கள் மேம்பாட்டுக்கு பிறந்தநாளை அர்ப்பணிக்கிறேன்: நரேந்திர மோடி i dedicate my birthday for workers development modi
தொழிலாளர்கள் மேம்பாட்டுக்கு பிறந்தநாளை அர்ப்பணிக்கிறேன்: நரேந்திர மோடி i dedicate my birthday for workers development modi
Tamil NewsToday,
காந்திநகர், செப். 17–குஜராத் முதல்– மந்திரி நரேந்திர மோடிக்கு இன்று 63–வது பிறந்த நாளாகும்.இன்று காலை அவர் காந்திநகரில் அரசு வீட்டில் தங்கி இருக்கும் தன் தாய் ஹீரா பாய் (94)விடம் ஆசி பெற்றார். அப்போது ஹீராபாய் உச்சி முகர்ந்து மோடியை வாழ்த்தினார்.நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் போனில் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்ட மோடி நிருபர்களிடம் கூறியதாவது:–எனது பிறந்தநாளை தொழிலாளர்களுக்கு அர்ப்பணிக்க ஆசைப்படுகிறேன். நாட்டின் தொழிலாளர்கள் அனைவரையும் மேம்படுத்தும் நாளாக இந்த நாள் இருக்கும்.இவ்வாறு மோடி கூறினார்.நரேந்திர மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு தொகுதியிலும் முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினரை உறுப்பினர்களாக சேர்க்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. டெல்லியில் இன்று மாலை பெரிய பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசார தொடக்கமாக அந்த கூட்டம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ...
Show commentsOpen link
0 comments: