Hunter gatherer European had blue eyes and dark skin

7 ஆயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த ஐரோப்பிய காட்டுவாசிகளின் முரண்பாடான உருவப்படம் வெளியீடு Hunter gatherer European had blue eyes and dark skin

லண்டன், ஜன. 27-

ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய கண்டத்திற்கு இடம் பெயர்ந்திருக்க கருதப்படும் முந்தைய கால மனிதர்களின் தோல் வெள்ளையாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர்.

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் வடமேற்கிலுள்ள மலைக் குகையிலிருந்து கடந்த 2006-ம் ஆண்டு இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதை நன்றாக பாதுகாத்த ஆராய்ச்சியாளர்கள், அந்த மனிதர்களின் பற்களில் இருந்து டி.என்.ஏ.வையும், ஒருவரது மரபணுவையும் எடுத்து சோதித்து பார்த்தனர். அப்போது முந்தைய ஐரோப்பிய காட்டுவாசிகள், சுவீடன் பின்லாந்து மக்களின் மரபணுக்களுக்கு ஒத்துக்காணப்பட்டதை கண்டுபிடித்தனர்.

7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படும் அவர்களது, கண்கள் நீலநிறத்திலும், மரபணுக்களின்படி தோல் கருப்பாகவும், முடி கருப்பாகவோ அல்லது பழுப்பு நிறமாகவோ இருந்திருக்கின்றன என்று கூறியுள்ளனர். இதுதொடர்பான உருவப்படத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆனால், முந்தைய வேட்டையாடி ஐரோப்பியர்கள் வெள்ளையாக இருந்திருக்கலாம் என எண்ணியிருந்த நிலையில், இந்த ஆராய்ச்சி முடிவுகள் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் இந்த மரபணு ஆராய்ச்சியானது காட்டுவாசிகளின், வேட்டை வாழ்க்கை எப்படி விவசாய வாழ்க்கைக்கு மாறியது என்பது பற்றிய ஒரு அனுமானத்தையும் கொடுத்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 


0 comments:

Popular Posts