Bangalore railway station train engine derails

Bangalore railway station train engine derails பெங்களூர் ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின் தடம் புரண்டது Bangalore railway station train engine derails

பெங்களூர், ஜன.6-

பெங்களூர் சிட்டி ரெயில் நிலையத்தின் 4-வது மற்றும் 5-வது பிளாட் பாரத்திற்கு இடையே ரெயில்களை நிறுத்துவதற்கான 'ஷெட்' உள்ளது. அந்த ஷெட்டில் இருந்து நேற்று காலையில் ரெயில் என்ஜினை மட்டும் வேறு பிளாட்பாரத்தில் எடுத்து விடுவதற்கு டிரைவர் முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் இருந்து ரெயில் என்ஜினின் சக்கரம் தடம் புரண்டது. இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் விரைந்து வந்து தடம் புரண்ட ரெயில் என்ஜின் சக்கரத்தை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியை தொடங்கினார்கள். ஆனால் என்ஜினை தூக்கி வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு பின்னர் தண்டவாளத்தில் ரெயில் என்ஜின் தூக்கிவைக்கப்பட்டது.

இதனால் பெங்களூரில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டிய லால்பாக் எக்ஸ்பிரஸ் காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 7.15 மணிக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது.

அதுபோல, பெங்களூரில் இருந்து சேலம் வழியாக காரைக்கால் போகும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 7.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக காலை 8.15 மணிக்கு புறப்பட்டு சென்றது.

மேலும் பாட்னா எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில எக்ஸ்பிரஸ் ரெயில்களும் பெங்களூரில் இருந்து நேற்று காலையில் காலதாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
...


0 comments:

Popular Posts