பிளாக்பெர்ரியை வாங்க சிஸ்கோ , கூகிள், சேப் நிறுவனங்களுக்கிடையே போட்டா போட்டி !! Blackberry to google

பிளாக்பெர்ரியை வாங்க சிஸ்கோ , கூகிள், சேப் நிறுவனங்களுக்கிடையே போட்டா போட்டி !!

by admin
Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday

வாட்டர்லூவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் பிளாக்பெர்ரி லிமிடெட், சிஸ்கோ சிஸ்டம்ஸ் (Cisco Systems) , கூகிள் (Google) மற்றும் சேப் (SAP) நிறுவனங்களுடன் மொத்தமாகவோ அல்லது தன்னைப் பாகங்களாகவோ விற்பனை செய்ய
முயற்சி செய்து பேசி வருகிறது எனப் பல நம்பத்தகுந்த தகவல்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் என்ற செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

ஏற்கனவே பேர்பேக்ஸ் பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் 4.7 பில்லியன் டாலர்களுக்கு பிளாக்பெர்ரி நிறுவனத்தைத் தனியார் நிறுவனமாக்க ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது.  அதற்குத் தேவைப்படும் நிதி குறித்து சில கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளதால், இந்த முயற்சி அதற்கு மாற்ராக இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் இன்டெல் கார்ப்பரேஷன் (Intel Corp.), ஆசிய நிறுவனங்களான எல்ஜி (LG) மற்றும் சாம்சங் (Samsung)  உள்ளிட்ட சில முக்கிய நிறுவனங்களுக்கு தனது நிறுவனத்தை வாங்கத் திட்டம் உள்ளதா என அடுத்த வாரத்திற்குள் தெரிவிக்குமாறு பிளாக்பெர்ரி கடிதம் அனுப்பி உள்ளது.

பிளாக்பெர்ரி  சொத்துக்களின்  மதிப்பு பற்றி சந்தேகம் ஒரு பிரச்சினையாக இருக்கும் என்றாலும், பிளாக்பெர்ரியின் பாதுகாப்பான சர்வர் (Server) மற்றும்  நெட்வொர்க் (Network) பற்றிய காப்புரிமையைக் கைப்பற்றுவதில் பல நிறுவனங்கள் முனைப்பாக உள்ளன. இந்தத் தகவல் பற்றி கூகிள் , இன்டெல் , சிஸ்கோ , எல்ஜி மற்றும் சாப் நிறுவனங்கள் கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டன.  சாம்சங் கருத்தும் தற்போது கிடைக்க வில்லை.

பிளாக்பெர்ரியில் நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் அதன் காலாண்டு இழப்பு அறிக்கையைக் கருதி இந்த முதலீட்டாளர்கள்  எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

The post பிளாக்பெர்ரியை வாங்க சிஸ்கோ , கூகிள், சேப் நிறுவனங்களுக்கிடையே போட்டா போட்டி !! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link


0 comments:

Popular Posts